Homeசெய்திகள்விளையாட்டுபாராலிம்பிக்ஸ் - இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்றார்

பாராலிம்பிக்ஸ் – இந்திய பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்றார்

-

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் ஆடவர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல் 3 பிரிவு இறுதிப்போட்டியில இந்திய வீரர் நிதேஷ் குமார், டோக்கியோ பாராலிம்பிக்சில் வெள்ளி வென்ற பிரிட்டனின் டேனியல் உடன் மோதினார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதேஷ் குமார் 21-14, 18-21 மற்றும் 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மேலும் பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் முதன் முறையாக தங்கம் வென்றும் சாதனை படைத்தார்.

MUST READ