Homeசெய்திகள்சினிமாவிரைவில் ஓடிடிக்கு வரும் நகுலின் 'வாஸ்கோடகாமா'!

விரைவில் ஓடிடிக்கு வரும் நகுலின் ‘வாஸ்கோடகாமா’!

-

- Advertisement -

நகுல் நடிப்பில் வெளியான வாஸ்கோடகாமா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.விரைவில் ஓடிடிக்கு வரும் நகுலின் 'வாஸ்கோடகாமா'!

பிரபல நடிகை தேவயானியின் தம்பி தான் நகுல் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் இவர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி கந்தகோட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அடுத்ததாக தி டார்க் ஹெவன் எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் நகுல். இதற்கிடையில் இவர் வாஸ்கோடகாமா எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட்டது. படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்த படத்தை ஆர் ஜே கிருஷ்ணன் இயக்க 5656 புரொடக்சன் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது.விரைவில் ஓடிடிக்கு வரும் நகுலின் 'வாஸ்கோடகாமா'! என் பி அருண் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சதீஷ்குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இதில் நகுல், அர்த்தனா, மன்சூர் அலிகான், கே எஸ் ரவிக்குமார், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, அனிதா சம்பத், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ