Homeசெய்திகள்சினிமாவிஜயின் 'கோட்' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்.... வெளியான புதிய தகவல்!

விஜயின் ‘கோட்’ படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்…. வெளியான புதிய தகவல்!

-

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது.விஜயின் 'கோட்' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்.... வெளியான புதிய தகவல்! புதிய கீதை படத்திற்கு பின்னர் நீண்ட வருடங்கள் கழித்து விஜயின் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் விஜயின் 68 வது படமாகும். இதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன், மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் கேப்டன் விஜயகாந்த் ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் படத்தில் தோன்ற இருக்கிறார்.
இந்த படம் நாளை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் ட்ரைலர் போன்றவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. விஜயின் 'கோட்' படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர்.... வெளியான புதிய தகவல்!அதே சமயம் பட குழுவினர்களும் புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைய விடாமல் வைத்திருக்கின்றனர். அதன்படி கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றில் படமாக்கப்பட்டதாக ஏற்கனவே சொல்லப்பட்டது. எனவே சிஎஸ்கே அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத், தி கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதற்காக தனது டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ