Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் - 2 முதல்நிலைத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

குரூப் – 2 முதல்நிலைத் தோ்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

-

குரூப் 2, 2ஏ பதவிகளுக்கு வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள முதல்நிலை தேர்வுக்கான நுழைவு சீட்டினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பதவிகளில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. முதல்நிலை எழுத்துத் தோ்வானது வரும் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து,  குரூப் 2 தேர்வில் பங்கேற்க சுமார் 7.93 லட்சம் பேர் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட்டை https://tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குரூப் 2 எழுத்துத் தோ்வானது செப்டம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் நிலையில், தேர்வர்கள்  ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

MUST READ