Homeசெய்திகள்சினிமாதயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!

-

நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!

ராஜகாளியம்மன் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தான் மோகன் நடராஜன் (வயது 71). இவர் பூக்களை பறிக்காதீர்கள், இனிய உறவு பூத்தது, பிள்ளைக்காக, வேலை கிடைச்சிருச்சு, கண்ணுக்குள் நிலவு, ஆழ்வார், வேல், தெய்வத்திருமகள் என பல தமிழ் படங்களை தயாரித்து பெயர் பெற்றவர். மேலும் இவர் பல படங்களில் வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில்இன்று அதிகாலை (செப்டம்பர் 4) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே திரை பிரபலங்கள் பலரும் மோகன் நடராஜனின் உடலுக்கு  நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா!அந்த வகையில் நடிகர் சூர்யாவும் நேரில் சென்று மறைந்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் உடலுக்கு  மாலை அணிவித்து இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. அதை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ