Homeசெய்திகள்சினிமாமுதல் ஆளாக 'கோட்' படக்குழுவை வாழ்த்திய அஜித்..... மகிழ்ச்சியில் வெங்கட் பிரபு!

முதல் ஆளாக ‘கோட்’ படக்குழுவை வாழ்த்திய அஜித்….. மகிழ்ச்சியில் வெங்கட் பிரபு!

-

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.முதல் ஆளாக 'கோட்' படக்குழுவை வாழ்த்திய அஜித்..... மகிழ்ச்சியில் வெங்கட் பிரபு! அமெரிக்கா மற்றும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் சிறப்புக் காட்சியுடன் இந்த படம் வெளியாகி உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல், லைலா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருக்கின்றது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவிலும் இந்த படம் உருவாகியுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களுடன் கோட் திரைப்படத்தை கண்டுகளிக்க வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் முதல் ஆளாக கோட் படக்குழுவை வாழ்த்தியுள்ளார். இதனை இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில், ” தளபதி விஜய்காகவும், எனக்காகவும், கோட் படக்குழுவுக்காகவும் முதல் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தல அஜித், என் அண்ணா” என்று மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

MUST READ