மலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தமிழில் நேரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் சமீபத்தில் நடிகர் நிவின் பாலி, பெண் ஒருவருக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி அந்தப் பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த தகவல் திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. ஏற்கனவே மலையாள சினிமாவில் நுழைய விரும்பும் பெண்களை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் என பல குற்றச்சாட்டுகள் ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் மூலம் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு ஒட்டுமொத்த மலையாள திரை உலகில் பரபரப்பை கிளப்பிய பாலியல் புகாரில் நடிகர் நிவின் பாலியும் சிக்கியிருந்த நிலையில் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வேன் என அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டு இருந்தார் நிவின் பாலி.
அதை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பாலியல் குற்றச்சாட்டு நடந்ததாக சொல்லப்படும் அந்த தேதியில் நிவின் பாலி கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார் என்பதற்கான ஆதாரம் வெளிவந்துள்ளது. மேலும் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசன், நிவின் பாலி அந்த சமயத்தில் வர்ஷங்களுக்கு சேஷம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் தங்களுடன் தான் ஹோட்டலில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -