Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

-

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ஹிட்லர் படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனியின் 'ஹிட்லர்' படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு!

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது வள்ளி மயில் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் செந்தூர் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஹிட்லர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கௌதம் மேனன், விவேக் பிரசன்னா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தை வானம், படைவீரன் போன்ற படங்களை இயக்கிய தனா இயக்கியுள்ளார். படத்திற்கு விவேக் – மெர்வின் இசை அமைத்துள்ளனர். நவீன் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. அடுத்ததாக இந்த படத்தில் இருந்து அடியாத்தி எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ