Homeசெய்திகள்சினிமாநடிகர் சங்க கட்டடத்திற்காக நிதியுதவி வழங்கிய விஜய்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்தி!

நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதியுதவி வழங்கிய விஜய்…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்தி!

-

- Advertisement -

நடிகர் விஜய் நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்காக நிதி உதவி வழங்கியுள்ளார் என நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதியுதவி வழங்கிய விஜய்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்தி!

தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 8) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி, பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து திரையுலகில் பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் கொடுமைகள் குறித்தும் பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு சினிமாவில் இருந்து ஐந்து ஆண்டுகள் பணியாற்ற தடை விதிக்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதியுதவி வழங்கிய விஜய்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்தி! பாலியல் விவகாரம் குறித்து தைரியமாக புகார் அளிக்கலாம் என்று அறிவித்ததோடு, அதற்கு தலைவராக நடிகை ரோகினியையும் நியமித்துள்ளனர். அதே சமயம் நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில் அதனை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளனர். மேலும் நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகள் நடத்த நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். நடிகர் சங்க கட்டடத்திற்காக நிதியுதவி வழங்கிய விஜய்.... அதிகாரப்பூர்வமாக அறிவித்த கார்த்தி!அத்துடன் “நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். அதுவும் கடனாக இல்லாமல் நிதியாக வழங்கியிருக்கிறார்” என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், நெப்போலியன் போன்றோரும் நிதி உதவி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

MUST READ