கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கோட். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதாவது அப்பா மற்றும் மகனாக நடித்திருந்தார். விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என அறிவித்திருந்த நிலையில் அதற்கு முன்னதாக அவர் நடித்துள்ள கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதிலும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்திருப்பதும் படத்தின் எதிர்பார்ப்பிற்கு மற்றுமொரு காரணம். எதிர்பார்த்த ரசிகர்களுக்கு விருந்து படைத்தது கோட் திரைப்படம். இருப்பினும் டி-ஏஜிங் செய்யப்பட்ட காட்சிகள் எதிர்பார்த்ததைப் போல் அமையவில்லை என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரும் கோட் திரைப்படத்தை தளபதி திருவிழாவாக கொண்டாடி தீர்த்து வருகின்றனர். ஆனால் இந்த படம் மற்ற மொழிகளில் எதிர்பார்த்த வசூலை ஈட்டி தரவில்லை. இதற்கு காரணம் சிஎஸ்கே அணி தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் இடம்பெற்றுள்ள சிஎஸ்கே மேட்ச்சுக்கு பதிலாக இந்தியா மேட்ச்சை காட்டியிருந்தால் இந்த படம் பான் இந்திய அளவில் ஹிட் அடித்திருக்கும் என சமீபத்தில் நடந்த பேட்டியில் இயக்குனர் வெங்கட் பிரபுவே கூறியிருந்தார். இதன் காரணமாக படத்தின் வசூல் 1000 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் படத்தின் வசூல் குறைந்து கொண்டே போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் இந்த படம் விஜயின் லியோ திரைப்பட வசூலை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.