2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கிறது.
1. தக் லைஃப்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ராஜஸ்தான், புதுச்சேரி, கோவா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு , அசோக் செல்வன், திரிஷா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தினை 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழு திட்டமிட்டு வருகின்றது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. விடாமுயற்சி
விடாமுயற்சி திரைப்படமானது அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தை தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் அஜித் உடன் இணைந்த அர்ஜுன் திரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் படமானது 2024 தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த படம் 2024 கிறிஸ்மஸ் அல்லது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.