ஜீனி படத்திலிருந்து ஜெயம் ரவியின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக சைரன் திரைப்படம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. மேலும் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜீனி. இந்த படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தினை இயக்குனர் மிஸ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அர்ஜுனன் இயக்குகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 100 கோடி பொருட்செலவில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்று (செப்டம்பர் 10) ஜெயம் ரவியின் 44ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக ஜீனி படத்தில் இருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி, தேவயானி, வாபிகா கேபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.