- Advertisement -
சர்வதேச சந்தையில் Crude Oil விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை பொட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயம் செய்து வருகிறது.
அதே நேரம், இந்தியாவில் Petrol, Diesel விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.இன்றைய கச்சா எண்ணெய்யின் உலகளாவிய விலை ₹5,828/1BBL மற்றும் 1.92% என்ற போக்கில் சரிவைக் காண்கிறது.
Crude Oil விலை உயரும் போது, உடனடியாக Petrol விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும் போது Petrol விலையை குறைக்காதது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவற்றின் விலையை குறைக்க அரசும் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.