Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் – அமைச்சர் பொன்முடி

-

- Advertisement -

தொடக்கப்பள்ளி முதல் உயர் கல்வி வரை தலை சிறந்த மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலம் - அமைச்சர் பொன்முடிபொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றபின்  உயர்கல்வித்துறை சார்பில் 2021-24 வரை  அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அறிவிப்புகளின் நிலை, மாணவ நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகள்,  பல்கலைக்கழக பதிவாளர்கள், அதிகாரிகள் உடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

திருவல்லிக்கேணியில் உள்ள உயர் கல்விமன்றத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்குபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு 15,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளதாகவும், அரசு கலை அறிவியல் கல்லூரிகளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ஒரே அளவில் உள்ளதாகவும், கிராமப்புற மாணவர்களை தமிழ் புதல்வன் திட்டம் கவர்ந்துள்ளதாகவும், மாணவர் சேர்க்கையை எண்ணிக்கையை உயர்த்துவதற்கும் கல்வி தரத்தை உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர் விவகாரம் குறித்த கேள்விக்கு, போலி பேராசிரியர்கள் விவகாரத்தில்  விசாரணை குழு அமைத்துள்ளோம்.  அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தகவல் கேட்டுள்ளோம். அறிக்கை பெற்றவுடன் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஒரு லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்ப்பதாகவும், தமிழ்நாட்டில் 1967 லிருந்து இரு மொழி கொள்கை மட்டும் தான் பயன்பாட்டில் உள்ளது. பிரசிடென்சி கல்லூரியில் இந்தி என்று ஒரு துறையில் 3 பேர் தான் படிக்கிறார்கள், மலையாளத்தில் 4 பேர் தான் படிக்கிறார்கள், உருது படிப்பில் யாருமே சேரவில்லை. எனவே இது போன்ற பாடங்கள் தேவையில்லை தமிழக மாணவர்கள் இரு மொழிக் கொள்கையை தான் விரும்புகிறார்கள்.  தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய அரசு நிதியை நிறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, என்றார்.

தமிழகம் தொடக்க கல்வியிலிருந்து உயர்கல்வி வரை தலை சிறந்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மத்திய அரசு கல்வி நிதியை நிறுத்தாமல் நிதியை வழங்கி தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமென்றார்.

உயர்வுக்கு படித்திட்டத்தின் மூலம் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களை அறிந்து உயர்கல்வியில் சேர்க்கும் பணிகள் தொடங்கி இருப்பதாகவும்,  வரும் 23ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளும் மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்கிருப்பதாகவும் தெரிவித்தார்.

MUST READ