நடிகர் சசிகுமார் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து இவர் ஈசன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்ததாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் சசிகுமார் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் எவிடன்ஸ், பிரீடம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் நந்தன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் சசிகுமார். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சசிகுமார், நடிகர் விஜய் குறித்து பேசி இருக்கிறார்.
அதாவது “ஈசன் படத்திற்கு பிறகு சசிகுமார் பீரியாடிக் படம் தொடர்பான கதையை நடிகர் விஜயிடம் சொன்னேன். அப்போது அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அந்த சமயத்தில் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது. இப்போது இருக்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் அந்த சமயத்தில் இல்லை” என்று தெரிவித்தார். அதே சமயம், “விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டார். அவர் அரசியலில் இருந்தாலும் அவர் மீண்டும் நடிக்க வர வேண்டும்” என்றார் சசிகுமார்.
- Advertisement -