Homeசெய்திகள்சினிமாசசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின் டிரைலர் வெளியீடு!

சசிகுமார் நடிக்கும் ‘நந்தன்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

சசிகுமார் நடிக்கும் நந்தன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.சசிகுமார் நடிக்கும் 'நந்தன்' படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் சசிகுமார் ஆரம்பத்தில் இயக்குனராக சினிமாவில் நுழைந்து தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கடந்த மே மாதம் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் சசிகுமார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதேசமயம் எவிடன்ஸ், பிரீடம் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சசிகுமார். இதற்கிடையில் இவர் நந்தன் எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தினை உடன்பிறப்பே படத்தை இயக்கியிருந்த இரா. சரவணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ் மிதுன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஆர்.வி. சரண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் நிலையில் ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார். நந்தன் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் எமோஷனல் கலந்த அரசியல் பின்னணியிலான படம் என்பது தெரியவந்துள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ