Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து அவமதிப்பு... ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து அவமதிப்பு… ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

-

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து அவமதிப்பு செய்த இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி விசைப்படகில் சென்ற 8 மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இலங்கை சிறையில் அடைத்தது.

fishermen arrested

பின்னர் கடந்த 5ஆம் மீனவர்கள் மீண்டும் ஆஜர்படுத்தியபோது நீதிமன்றம்  8 பேருக்கும் தலா ரூ.50,000 அபராதம் விதித்திருந்தது. அவர்களில் 2வது முறையாக கைதான 3 பேருக்கு 6 மாத சிறை விதித்தது. இதனால் 5 மீனவர்கள் அபராதம் செலுத்திய நிலையில், இலங்கை அதிகாரிகள் அவர்களுக்கு மொட்டை அடித்து தமிழ்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கச்சி மடம் மீனவர்கள், இலங்கை அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மீனவர்கள், மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு இலங்கை அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

MUST READ