பொதுவாகவே அனைவருக்கும் 8 மணி நேரம் தூக்கம் என்பது மிகவும் அவசியம். அதிலும் காலையில் 6 மணிக்குள் எழுவதும் இரவில் 10 மணிக்குள் தூங்க செல்வதும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதில் அதிகாலையில் எழுவது நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
அதாவது மூளை நரம்பு இயக்கங்கள் சீராக செயல்பட்டு மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். இதனால் உற்சாகமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
அடுத்தது அதிகாலையில் எழுவதனால் மன அழுத்தம் குறையும்.
மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் அன்றைய தினம் சிறப்பாக அமையும். அதாவது என்னென்ன வேலைகளை எப்படி செய்யலாம் என்று சரியான முறையில் திட்டமிட முடியும்.
அதேசமயம் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் உடலில் பல நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது அதிக ஈடுபாட்டுடன் செய்ய முடியும்.
அதிகாலையில் விழுவதன் காரணமாக இரவில் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லவும் முடியும். இதனால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். நிம்மதியாகவும் தூங்கலாம்.
அதிகாலையில் எழுந்து தூய்மையான ஆக்சிஜனை சுவாசிப்பது நுரையீரல் பிரச்சனை, ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
மேலும் அதிகாலை எழுவது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க வழிவகை செய்யும். அதன்படி உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி உடல் நலனுக்கும் மனநலனுக்கும் ஆரோக்கியத்தை தரும்.
எனவே நீங்களும் அதிகாலையில் எழுந்து இரவில் சீக்கிரம் தூங்க பழகுங்கள்.