Homeசெய்திகள்உலகம்துனிஷியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம்

துனிஷியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம்

-

- Advertisement -

துனிஷியாவில் அதிபருக்கு எதிராக போராட்டம்

துனிசியாவில் அந்நாட்டு அதிபருக்கு எதிராக தொழிற்சங்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர்

துனிஷியா நாட்டின் அதிபர் கைஸ் சையத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தினர், நாடு முழுவதும் பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துனிசியா அதிபர் கைஸ் சையத் மீது எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதே போல் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், துனிசியன் தொழிலாளர் சங்கம் சார்பில், தலைநகர் துனிசில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, முக்கிய வீதிகளில் கூடியும், பேரணியாகச் சென்ற  போராட்டக் காரர்கள் அதிபர் கைஸ் சையதுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ஆனால் குற்றச்சாட்டுகளை அதிபர் கைஸ் சையத் மறுத்துள்ளார். துனிசியாவில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க சட்டரீதியாக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ