Homeசெய்திகள்தமிழ்நாடுஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த தூத்துக்குடி இளைஞர்

ஜப்பான் பெண்ணை காதலித்து திருமணம் செய்த தூத்துக்குடி இளைஞர்

-

- Advertisement -

ஜப்பான் நாட்டை சேர்ந்த மியுகி என்ற இளம் பெண்ணை, தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் குடும்பத்துடன் தங்கி மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் பொறியியல் பட்டம் பெற்று ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

அப்போது ராஜேஷுக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மியூகி என்ற பெண்ணும் காதல் ஏற்பட்டு, இருவரும் கடந்த ஓராண்டாக பழகி வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டவே கடந்த 8 மாதங்களுக்கு முன் சென்னையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று ராஜேஷ் – மியூகி ஆகியோரது திருமணம் தமிழ் முறைப்படி திருமழிசையில் உள்ள தனியார் மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.

இதில் மணமக்களின் உறவினர்கள் கலந்துகொண்டு இருவரையும்  வாழ்த்தினர். திருமண விழாவில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தமிழ் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்து பங்கேற்றது பார்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

MUST READ