சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினி தவிர அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தில் இருந்து மனசிலாயோ எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் செம ட்ரண்டாகி வருகிறது. இந்த பாடலில் ரஜினி, மஞ்சு வாரியர், ரக்சன் ஆகியோர் நடனமாடி இருப்பர். இந்த பாடலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். இந்த பாடலில் ரஜினி வழக்கம்போல் பட்டையை கிளப்பி இருந்தாலும் மஞ்சு வாரியவாரியரும் மிரட்டி இருந்தார். மஞ்சு வாரியர் 46 வயதிலும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். அதிலும் ஏராளமான இளைஞர்களின் மனதை வென்றுள்ளார் என பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வந்தனர்.
ஏற்கனவே மஞ்சு வாரியர் ரஜினிக்கு மனைவியாக நடித்துள்ளார் என்று தகவல்கள் கசிந்து இருந்த நிலையில் தற்போது மஞ்சு வாரியர் இந்த படத்தில் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் Vlog செய்யும் நபராக நடித்திருக்கிறாராம்.
- Advertisement -