- Advertisement -
பல்கேரியாவில் பாரம்பரிய குதிரை பந்தயம்
ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பல்கேரியாவில் நடைபெற்ற பாரம்பரிய குதிரை பந்தயத்தை ஏராளமானோர் கண்டு களித்தனர்
லெந்து நாள் தொடக்கை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி
பல்கேரியாவின் தென்- மேற்கு பகுதியில் உள்ள பச்சேவோ கிராமத்தில் ஈஸ்டருக்கு முந்தைய லெந்து நாட்களை பண்டிகையுடன் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் லெந்து காலத்தின் முதன் சனிக்கிழமையான புனித தியோடர்(theodore) தினத்தை ஒட்டி குதிரை பந்தயம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை சாலையின் இருகரையில் நின்றபடி ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
ஏராளமான மக்கள் சாலையோரம் நின்று கண்டு களிப்பு
குதிரைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக இந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராம மக்களால் பாரம்பரிய முறைப்படி கடைபிடிக்கப்படுகிறது.