Homeசெய்திகள்தமிழ்நாடுஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

-

- Advertisement -

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்ததை அடுத்து 16 நாட்களுக்கு பின்னர் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 7,182 கனஅடி நீர்வரத்தாகும் நிலையில், காவிரியில் 6,973 கனஅடி திறக்கப்படுகிறது. இதேபோல் கபிணி அணைக்கு வினாடிக்கு 1,873 கனஅடி நீர்வரத்தாகும் நிலையில், காவிரியில் வினாடிக்கு 1,975 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. இரு அணைகளில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரி நீர் வழக்கு– உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது

இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க 16 நாட்களுக்கு பின்னர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

MUST READ