Homeசெய்திகள்சினிமாஇது ஒரு அருமையான படைப்பு.....'நந்தன்' படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்!

இது ஒரு அருமையான படைப்பு…..’நந்தன்’ படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -
kadalkanni

திரை பிரபலங்கள் பலரும் நல்ல படைப்புகளை பாராட்ட தவறுவதில்லை. அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் இன்று செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி உள்ள நந்தன் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.இது ஒரு அருமையான படைப்பு.....'நந்தன்' படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன்!

சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அயோத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் சசிகுமார், இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகி இருந்தால் நந்தன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சசிகுமார் தவிர ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ் மிதுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க ஆர் வி சரண் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். நீண்ட நாட்களாக ரிலீஸ் செய்யப்படாமல் நிலுவையில் இருந்த இந்த படம் தற்போது திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், நந்தன் திரைப்படம் குறித்து பேசி உள்ளார்.

அவர் பேசியதாவது, “சசிகுமார் மற்றும் இரா. சரவணன் ஆகியோர் இணைந்து நந்தன் படம் ஒரு அருமையான படைப்பை தந்துள்ளனர். சசிகுமார் இந்த படத்தில் வித்தியாசமாக நடித்திருப்பார் என்ற எதிர்பார்ப்பில் சென்றேன். இரா. சரவணன், முதல் காட்சியை தந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது. சசிகுமார் சார் பெரும்பாலான படங்களை மிகவும் இயல்பாக நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் மிக மிக எதார்த்தமாகவும் இயல்பாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் நடித்திருக்கிறார். படம் பார்த்து நிறைய இடத்தில் சிரித்தேன், யோசித்தேன், கண் கலங்கினேன், கடைசியில் வேகமாக கைதட்டினேன். அந்த அளவிற்கு இரா. சரவணன் அவர்களின் எழுத்தும் படக்குழுவினரின் உழைப்பும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ