Homeசெய்திகள்சினிமா'லப்பர் பந்து' படக்குழுவுனரை பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்!

‘லப்பர் பந்து’ படக்குழுவுனரை பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜ் லப்பர் பந்து படக்குழுவை பாராட்டி உள்ளார்.'லப்பர் பந்து' படக்குழுவுனரை பாராட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியான வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. அடுத்ததாக இவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் , இன்று (செப்டம்பர் 20) ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தையும் பட குழுவினரையும் பாராட்டியுள்ளார். அதாவது அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் லப்பர் பந்து. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து சுவாஸ்விகா, காளி வெங்கட், பாலசரவணன், தேவதர்ஷினி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்க தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் திரைப்படங்கள் பலரும் இத்திரைப்படத்தினை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே சிவகார்த்திகேயன், ஸ்ரீ கணேஷ், விநாயக் சந்திரசேகரன் உள்ளிட்டோர் படத்தினை பாராட்டியுள்ளனர். அந்த வகையில் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜூம் லப்பர் பந்து திரைப்படம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டு பாராட்டியுள்ளார். அந்த பதிவில், “லப்பர் பந்து திரைப்படம் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். படக்குழுவினரின் புத்திசாலித்தனத்திற்காக அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ