இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராடத்தில் குதித்தனர். இதனால் அதிபர் கேத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறினார். இதனை அடுத்து, ரணில் விக்ரமசிங்கே தலைமையில அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
இதனை அடுத்து, இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இலங்கையில் 9-வது அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தர்லில் 38 வேட்பாளர்கள்
போட்டியிடுகின்றனர். இதில் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இலங்கை முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி
நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு, வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், அதன் பின்னர் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்றும், நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்பது தெரிந்து விடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.