Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பதி லட்டு விவகாரம் - திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் சோதனை

திருப்பதி லட்டு விவகாரம் – திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் சோதனை

-

- Advertisement -

திருப்பதி கோவில் லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் நிறுவனத்தில் மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து கேள்வி எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூலை 6-ஆம் தேதி முதல் 12 -ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருப்பதியில் லட்டு தயாரிக்க தானியங்கி இயந்திரம்

அதில் நெய்யில் விலங்கு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டது தெரியவந்தது. திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பிலும் நெய் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தை ஆந்திர அரசு கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும் திண்டுக்கல் தனியார் நேற்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இந்த நிலையில், திண்டுக்கல் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின்போது பால் மற்றும் நெய் பொருட்களின் மாதிரிகளை சேகரித்தனர்.

MUST READ