Homeசெய்திகள்தமிழ்நாடுகாதல்ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்

காதல்ஜோடியை மிரட்டி பணம் பறித்த காவலர் சஸ்பெண்ட்

-

காரைக்கால் கடற்கரையில் காதல்ஜோடியை மிரட்டி ஆன்லைன் மூலம் பணம் பெற்ற கடலோர காவல் படை காவலர் ராஜ்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைக்கு நேற்று முன்தினம் காதல் ஜோடி வந்துள்ளனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படை காவலர் ராஜ்குமார் அந்த காதல் ஜோடியை புறநகர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவர்களை மிரட்டி ரூ.3000 ஜிபே வாயிலாக பணம் வாங்கினார். மேலும் அந்த பெண்ணை மிரட்டி தாலி உள்ளதா என்று கழுத்தில் கை வைத்து பார்த்ததாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் அவர்களிடம் பணம் பெற்றது குறித்தும், மிரட்டியது குறித்தும் காவலரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சிறுவனின் கைது வீடியோ வெளியான விவகாரம்- தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!
File Photo

இது தொடர்பான வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்டகாரைக்கால் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ், கடலோர காவல் படை காவலர் ராஜ்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

MUST READ