மூடா வழக்கில் முதலமைச்சர் சித்தராமையா விசாரிக்க தடை விதிக்க முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் சார்பில் மைசூருவில் முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு கடந்த 2021-ம் ஆண்டு 14
வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி சமூக
ஆர்வலர்கள் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு கொடுத்தனர். அதனை ஏற்று கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கிய ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி முதலமைச்சர் சித்தராமையா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கடந்த 12-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்றம், முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடை விதிக்க முடியாது என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்தும், ஆளுநர் உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டார்.