Homeசெய்திகள்க்ரைம்அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு

-

- Advertisement -

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வீட்டு வசதி துறை மற்றும் விவசாயத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மகன் பிரபு மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் மீது சொத்துக் குவிப்பு வழக்குமுன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்ந்து மூன்று முறை ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் 2001 முதல் 2006 வரையும் 2011 முதல் 2016 வரையும் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பகுதி வகித்துள்ளார். மேலும் மேலும் 2016 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்பொழுதும் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மீது ஊழல் வழக்கு ஒன்றை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்தது

ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கு திட்ட அனுமதி வழங்கிய விவகாரத்தில் 27.90 கோடி ரூபாய் பணத்தை தனியார் நிறுவனங்கள் மூலம் லஞ்சமாக பெற்றது விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மூலமாக முன்னாள் அமைச்சர் ஆன வைத்திலிங்கத்தின் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு இந்த லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் என 11 பேர் மீதுசென்னை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதனை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் சொத்துக்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம் 2011 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தன் பெயரிலும் தன் மகன் மனைவி ஆகியோர் பேரிலும் மொத்தமாக 36.58 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன் பிறகு வைத்திலிங்கத்தின் மகன் பிரபு நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனத்தில் சுமார் 23 கோடி அளவில் பூந்தமல்லி திருவெறும்பூர் பகுதியில் நிலம் வாங்கியது தெரியவந்தது.

அதே காலகட்டத்தில் ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் தொடர்பான நிறுவனங்கள் மூலம் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு 27.90 கோடி ரூபாய் பணம் அளிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக 2015 – 16 மற்றும் 2016 – 17 ஆகிய காலகட்டத்தில் இந்த நிறுவனத்தில் எந்தவித தொழில் நடவடிக்கையும் இல்லை என்பது வருமானவரித்துறை தாக்கல் ஆவணம் மூலம் தெரிய வந்தது.

இந்த நிலையில் தான் 2011 முதல் ஆண்டு கால கட்டத்தில் அமைச்சராக வைத்திலிங்கம் இருந்த இப்போது லஞ்சப் பணமாக பெற்ற பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக 2011 ஆம் ஆண்டு 36.58 லட்சம் மனைவி மற்றும் மகன்கள் உள்ளிட்டோர் மீது சொத்துக்கள் இருந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு கணக்கிட்டு பார்க்கும் பொழுது 34 கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மற்றும் உறவினர்கள் தொடர்பான வருமானமாக மூன்று கோடியே 6 லட்சம் ரூபாய் அளவில் இருந்த நிலையில், செலவாக ஒரு கோடியே 62 லட்ச ரூபாய் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் இந்த காலகட்டத்தில் சேமிப்பாக ஒரு கோடியே 44 லட்ச ரூபாய் வைத்திருந்ததாகவும், இருப்பினும் 2011 முதல் 2016 வரை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அவரது மனைவி மற்றும் மூத்த மகன் பிரபு ஆகியோர் பெயரில் 33.92 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக இந்த காலகட்டத்தில் வரவு செலவு கணக்குகளை 32.47 கோடி ரூபாய் அளவில் வருமானத்திற்கு அதிகமாக முன்னால் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் சொத்துக்களை குவித்ததாக தெரியவந்துள்ளது. குறிப்பாக 1057 சதவீதம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்று இந்த சொத்துக்களை பெற்ற காரணத்தினால் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு ஆகியோர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ