கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்ஜே பாலாஜியின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தினை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதைத்தொடர்ந்து இந்த படத்தை இயக்குனர் சுந்தர்.சி தான் இயக்கப் போகிறார் என்பதையும் பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக வெளியாகி இருந்த அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். மேலும் அரண்மனை 5 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் சுந்தர். சி. இவ்வாறு திரைத்துறையில் பிசியான நடிகராகவும் இயக்குனராகவும் பலம் வரும் சுந்தர். சி, அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்க இருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷூட்டிங் 2024 நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.