Homeசெய்திகள்சினிமாமீண்டும் மோட்டார் ரேஸில் அஜித்.... 2025 ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!

மீண்டும் மோட்டார் ரேஸில் அஜித்…. 2025 ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!

-

- Advertisement -

தமிழ் திரை உலகில் தல என்றும் அல்டிமேட் ஸ்டார் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகியிருக்கிறது. மீண்டும் மோட்டார் ரேஸில் அஜித்.... 2025 ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!இந்த படத்தினை வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதே சமயம் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் அஜித் பைக், கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர். மீண்டும் மோட்டார் ரேஸில் அஜித்.... 2025 ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!இதற்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். படப்பிடிப்பில் கிடைக்கும் சிறிய இடைவெளியில் கார், பைக்கை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வரும். இந்த நிலையில் தான் நடிகர் அஜித் 2025 ஆம் ஆண்டில் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் மோட்டார் ரேஸில் அஜித்.... 2025 ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டம்!இது தொடர்பாக ஐரோப்பா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ