மெகா ஸ்டார் மம்மூட்டியின் 428 வது படத்தின் ஷூட்டிங் இன்று (செப்டம்பர் 25) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் மெகா ஸ்டாராக வலம் வரும் மம்மூட்டி தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த காதல் தி கோர், பிரம்மயுகம், டர்போ போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது மம்மூட்டி, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் மம்மூட்டி, குருப் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஜித்தின் கே ஜோஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். இந்த படம் மம்மூட்டியின் 428வது படமாகும். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை நடிகர் மம்மூட்டி தனது மம்மூட்டி கம்பெனி நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோவில் பகுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் இந்த படம் 2025 கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -