இயக்குனர் சங்கர் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதேசமயம் இவர் ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் வருகின்ற கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சங்கர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதி இருந்த வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக ஆயிரம் கோடி பட்ஜெட்டில் இயக்கப் போவதாக தெரிவித்திருந்தார் சங்கர். அதைத் தொடர்ந்து இந்த படத்தில் ரன்வீர் சிங், யாஷ் போன்றோர்கள் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் இந்த படத்தில் சூர்யா இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கிடைத்த புதிய தகவல் என்னவென்றால், இயக்குனர் சங்கர், சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருடனும் வேள்பாரி நாவலில் நடிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நின்று எதிர்பார்க்கப்படுகிறது. சங்கர், விக்ரம் ஆகிய இருவரும் ஏற்கனவே அந்நியன் திரைப்படத்தில் இணைந்திருந்தனர். அதே சமயம் விக்ரம் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் பிதாமகன் திரைப்படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சங்கர், சூர்யா, விக்ரம் ஆகிய மூவரும் இணைய இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தில் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.