அப்பாடா, ஒருவழியாக செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது – கடந்து வந்த பாதை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் இருந்து இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அவருக்கு 61 முறை காவல் நீடிப்பு வழங்கப்பட்டது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சட்டவிரோத பணபரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி கடந்த 2023 ம்ஆண்டு 14 ம்தேதி இரவு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டபோது நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாகசென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே சட்டவிரோத கைது எனக்கூறி அவரது மனைவி மேகலா சார்பில் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்..இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் நிஷாபானு, பரதசக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. இடைக்கால உத்தரவாக அவருக்கு இருத அறுவை சிசிக்சைக்காக தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. தொடர்ந்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு வழக்கு விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, சட்டவிரோத கைது,விதிகளை மீறிய கைது என்றால் ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்தது என்றும், கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்கு மேல் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கேட்க முடியாது. அமலாக்கத்துறைக்கு நிலைய அதிகாரி என்ற பொறுப்பு வழங்கப்படவில்லை. அதற்கான அதிகாரம் ஏதும் இல்லாததால் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் கிடையாது என்றும் வாதிட்டார்.
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா,ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட பிறகு ஆட்கொணர்வு தாக்கல் செய்ய முடியாது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கைது செய்யப்பட்டவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இதையடுத்து மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன்,இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி வழங்கிய உத்தரவை உறுதி செய்தார்.
இதையடுத்ததுதான் அமலாக்கத்துறை காவலில் எடுத்தவிசாரித்த பின்பு, கடந்த ஆகஸ்ட் 13 ம்தேதி காவல் முடித்து ஆஜர்படுத்தப்பட்டபோது 3000 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்
அமைச்சாராக தொடர்ந்து உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிடமுடியாது என மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.
மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ய உயர்நீதின்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்
வழக்கை விசாரித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்தநிலையில்தான் உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் எட்டாம்தேதி செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
இதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 61 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.