மெட்டா நிறுவனம் அதன் முதல் AR கண் கண்ணாடியை அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (CEO Mark Zukerberg) அறிமுகம் செய்தார். அந்த கண்ணாடிக்கு ஓரியன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதனை பற்றி அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் கூறுகையில், தங்களின் கை அசைவுகள் மற்றும் குரல் மூலம் அந்த கண்ணாடிக்கு தகவல்களைஅனுப்ப முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மூளை சமிக்ஞைகளைப் (brain signals) பயன்படுத்தி செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த பயனர்களை அனுமதிக்கும் மணிக்கட்டு அடிப்படையிலான நரம்பியல் இடைமுகம் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். மெட்டா ஓரியன் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்களை கைப்பற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.
பயனாளர்கள் தங்களின் கை அசைவுகள் மற்றும் குரல் மூலம் அந்த கண்ணாடிக்கு தகவல்களைஅனுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் எங்களை நினைவில் வைத்து கொள்வது, ஸ்கேனிங், தேடுபொருள் என பல வசதிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கிறது என மார்க் அறிவித்தார். இதே போல மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாதனங்களில் அறிமுகம் ஆக உள்ள புதிய வசதிகளையும் அவர் அறிவித்துள்ளார். வீடியோகளை நொடி பொழுதில் மொழி பெயர்க்கும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளதாக அவர் கூறியது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.