Homeசெய்திகள்அரசியல்அமலாக்கத்துறை கைது செய்தவர்கள் ஒவ்வொருவராக விடுதலை - நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

அமலாக்கத்துறை கைது செய்தவர்கள் ஒவ்வொருவராக விடுதலை – நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

-

- Advertisement -

அமலாக்கத்துறை கைது செய்தவர்கள் ஒவ்வொருவராக விடுதலை - நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி

கடுமையான சட்டப் போராட்டத்திற்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக விடுதலை பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கடந்த 15 மாத கால சட்டப்போராட்டத்திற்கு பின் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

பாஜகவின் சமரசத்திற்கு அடிபணியாமல் அவர் மன உறுதியோடு போராடியது பாராட்டுக்குரியது. இந்த 15 மாதம் செந்தில் பாலாஜியை சார்ந்தவர்களுக்கு கடினமானது.

இந்தியா கூட்டணியினரை குறிவைத்து அமலாக்கத்துறை கைது செய்து வந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஓவ்வொருவரின் விடுதலையின் போதும் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறை மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது.

அமலாக்கத்துறை சட்டரீதியான உரிமைகளை தடுத்தது , செந்தில் பாலாஜி உடல்நலம் குறைவாக இருந்த போதிலும் அவரை கைது செய்தது.

ஒரு உன்னதமான படைப்பு….. ‘வாழை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமலாக்கத்துறை அரசின் அமைப்பாக செயல்படாமல், பாஜகவின் அடியாளாக எதிர்கட்சிகள் மீது செயல்பட்டது. அதற்கு எதிரான விமர்சனங்களை தான் உச்சநீதிமன்றம் வைத்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நல்ல நிர்வாகி, அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்பது தமிழ்நாட்டிற்கும், கொங்கு மண்டலத்திற்கும், கரூருக்கும் சிறப்பானது என்றார்.

MUST READ