ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா திரைப்படம் மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் இன்று (செப்டம்பர் 27) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தினை கொரட்டலா சிவா இயக்கியிருக்கிறார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் தேவரா முதல் பாகம் இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஜான்வி கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சைஃப் அலிகான் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தினை நந்தமுரி தரகா ராமா ராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஆக்சன் கலந்த கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை காண ரசிகர்கள் பலரும் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வரும் ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
#TFNExclusive: Maverick director @ssrajamouli, along with his wife #RamaRajamouli and #KoduriSriSimha, enjoys the #Devara show in Hyderabad! 🤩#SSRajamouli #JrNTR #TeluguFilmNagar pic.twitter.com/HgWSxNSSIO
— Telugu FilmNagar (@telugufilmnagar) September 27, 2024
இந்த நிலையில் பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி தனது குடும்பத்துடன் தேவரா படத்தினை காண ஐதராபாத்தில் உள்ள பிரபல திரையரங்கிற்கு வந்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் ராஜமௌலி இயக்கியிருந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.