Homeசெய்திகள்தமிழ்நாடுநாமக்கல் அருகே வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்

நாமக்கல் அருகே வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை சுட்டுப்பிடித்த போலீசார்

-

- Advertisement -

கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு கண்டெய்னர் லாரியில் தப்பிவந்த வடமாநில கொள்ளையர்களை நாமக்கல் அருகே தமிழக போலீசார் சுட்டுப்பிடித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளை கும்பல் கண்டெய்னர் லாரியில் தப்பிச் சென்றனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே  சாலையில் சென்ற வாகனங்கள் மீது கொள்ளையர்களின் கண்டெய்னர் லாரி மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலிசார் அந்த கண்டெய்னர் லாரியை வாகனத்தில் துரத்திச்சென்றுபச்சாபாளையம் அருகே பிடித்தனர்.

அப்போது கண்டெய்னருக்குள் மறைந்திருந்த கொள்ளையர்கள் போலிசாரை ஆயுதங்களால் தாக்க முயன்றனர். அப்போது போலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற கொள்ளையர்களை போலிசார் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் 2 காவல்துறையினர் காயம் அடைந்தனர்.

கொள்ளை கும்பல் பயன்படுத்திய கண்டெய்னர் லாரியில் இருந்த சொகுசு காரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே,  சம்பவம் நடைபெற்ற இடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

MUST READ