spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினிபேருந்து கவிழ்ந்து விபத்து... 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினிபேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

-

- Advertisement -
kadalkanni

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பகுதியில் இருந்து இன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் மினி பேருந்து ஒன்று, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. மம்சாபுரம் காந்திநகர் பகுதியில் அதிவேகமாக சென்ற பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பள்ளி மாணவர் நிதிஷ்குமார்,  வாசு, சதீஷ்குமார், ஸ்ரீதர் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலிசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து மம்சாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ