ராம்சரண் – சங்கர் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் பட இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் சங்கர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தினை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் இந்தியன் 3 திரைப்படத்தையும் தயார் செய்து வைத்துள்ளார் சங்கர். அடுத்ததாக வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் சங்கர். இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தாமதமானது. அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவுக்கு வந்த கேம் சேஞ்சர் படமானது வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
28th Massss Promo 🔥🥁 30th Orrraaa Mass Song #GameChangerSecondSingle 🔥❤️🥁#RaaMachacha 🏆🎧💃 https://t.co/bmOg9RCR50
— thaman S (@MusicThaman) September 26, 2024
அடுத்தது இந்த படத்திலிருந்து ரா மச்சா மச்சா எனும் இரண்டாவது பாடல் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் எனவும் இந்த பாடலின் ப்ரோமோ வருகின்ற (செப்டம்பர் 28) நாளை வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் தவிர கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இதற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.