Homeசெய்திகள்சினிமாசெல்ஃபி கேட்டு பின்னாலயே அலைந்த ரசிகர்.... கராராக பேசிய பிரியங்கா மோகன்!

செல்ஃபி கேட்டு பின்னாலயே அலைந்த ரசிகர்…. கராராக பேசிய பிரியங்கா மோகன்!

-

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளை ஒருவராவார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.செல்ஃபி கேட்டு பின்னாலயே அலைந்த ரசிகர்.... கராராக பேசிய பிரியங்கா மோகன்! இவர் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் அழகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றார். கடைசியாக நானி, எஸ்.ஜே சூர்யா ஆகியோரின் கூட்டணியில் வெளியான சரிபோதா சனிவாரம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன். அடுத்தது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. எனவே அதற்கான முழு வேறுபாடுகளும் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா மோகனிடம் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்று அவரை பின்தொடர்ந்துள்ளார். அப்போது நடிகை பிரியங்கா மோகன் அந்த ரசிகரிடம், “இது மாதிரி ஃபாலோ பண்ணிட்டு வரக்கூடாது” என்று கராராக பேசி அவரை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏற்கனவே பிரியங்கா மோகன் காருக்குள் இருக்கும் சமயத்தில் ரசிகர் ஒருவர் இதுபோன்று செல்ஃபி எடுக்க முயன்றதனால் “காருக்குள் வந்து உட்கார்ந்து கொள்கிறீர்களா?” என்று பிரியங்கா மோகன் ரசிகர்களிடம் கோபப்பட்ட வீடியோவும் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ