Homeசெய்திகள்ஆன்மீகம்கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா

-

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் விழா

கேரளாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

40 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பொங்கலிடுகின்றனர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் விழா கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற்றதால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் வந்து உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் இடுவதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்தாண்டு 40 லட்சம் பக்தர்கள் பொங்கல் இடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற பொங்கல் விழா கோலாகலம்

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்திற்குள் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது கரமனையில் இருந்து வாகனங்கள் மாட்டுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

MUST READ