இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விமான நிலைய இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இந்திய விமானப்படை தினத்தையொட்டி வான் சாகச நிகழ்ச்சிகள் காரணமாக அக்டோபர் 1 ஆம் தேதி நண்பகல் 13:45 முதல் மாலை 15:15 வரை விமானநிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், அக்டோபர் 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் நேரம் விமான நிலையம் மூடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் பயண அட்டவணைகளைச் சரிபார்த்து, சமீபத்திய தகவல்களுக்கு பயணிகள் விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விமான சாகச நிகழ்ச்சிகளின்போது சென்னை சர்வதேச விமான நிலையம், இந்திய விமானப்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாகவும் விமான நிலைய இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது.