மும்பை சைபர் க்ரைம் போலீஸ் எனக்கூறி சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் 36000 ரூபாய் மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இது போன்ற மோசடி புகார்கள் தினந்தோறும் சென்னை காவல் துறைக்கு வந்த வண்ணம் உள்ளன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கும் பிரீத்தி என்ற பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் பணம் அனுப்ப வேண்டும் என கூறி 36000 ரூபாய் பறித்துள்ளனர். இது தொடர்பாக பிரீத்தி சென்னை சைபர் க்ரைம் போலீஸில் புகாரட அளித்துள்ளார்.
அதே போன்று ஆவடியை சேர்ந்த அகல்யா என்ற பெண்ணிற்கு கடந்த ஞயிற்று கிழமை (செப் – 29) அன்று காலை 9 மணி அளவில் அலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பானது பதிவு செய்யப்பட்ட செய்தி. அதில் தொலைத்தொடர்பு ஆணையத்தில் (Telecom authority) இருந்து அழைப்பதாகவும் உங்களுடைய மொபைல் எண் அசாதாரண பயன்பாடு (Abnormal usage) உள்ளதால் சேவை தடை செய்யப்படும் என்றும் மேலும் விவரங்களுக்கு எண் 9 -ஐ தேர்வு செய்யவும் என தெரிவித்ததை அடுத்து அவர் எண் 9-ஐ தேர்வு செய்துள்ளார்.
அதன் பின்னர் வாடிக்கையாளர் சேவை நிர்வாகியை போல் ஒருவர் பேசியுள்ளார். அப்போது அவர் எந்த வகையில் (In which regard you received the call) உங்களுக்கு அழைப்பு வந்தது என கேட்டிருக்கிறார். அசாதாரண பயன்பாடு காரணத்திற்காக சேவை தடை செய்யப்படும் என அழைப்பு வந்ததாக அகல்யா தெரிவித்துள்ளார். சிரிது நேரம் காத்திரிக்கும் படி கூறிவிட்டு தகவலலை செக் செய்து தருவதாக தெரிவித்துள்ளார். அந்த இடைபட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட குரல் செய்தி ஒலித்துள்ளது. அதில் ஆங்கிலத்தில் “ In order to ensure your rights and interest the entire call will be recorded..the call is being connected” என ஒலித்துள்ளது. பின்னர் உங்களை காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும் என தெரிவித்து….உங்கள் பெயர் அகல்யா, சரியா ? என கேட்டு எங்கள் கணினி உங்கள் பெயரில் மற்றொரு மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளது என காட்டுகிறது என்றார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை- நேரில் ஆஜர்…!
அந்த மொபைல் எண் , இன்னும் உங்கள் பெயரில் உள்ள வேறு மொபைல் எண்கள் மற்றும் நீங்கள் தற்போது பயன்படுத்தும் இந்த எண் போன்று இந்த பெயரில் உள்ள எண்களை சரியாக 2 மணி நேரத்தில் தொலைத்தொடர்பு அமலாக்கத் துறை கண்டுபிடித்துவிடும் என்றார்.
அதற்கு அகல்யா புரியவில்லை என மறுபடியும் சொல்ல கேட்டதும் அவர் ஒரு மொபைல் எண்னை(67674XXXX) சொல்லி இந்த எண்ணை நீங்கள் பயன்படுத்துகிறீரா என கேட்டிருக்கிறார். இல்லை என தெரிவித்ததும் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர் பயன்படுத்துகிறாறா என கேட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட எண் 67674XXXXX அதிக அளவில் விளம்பரங்களை அனுப்பியதாக சமீபத்தில் பலர் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளனர். உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மொபைல் எண்ணையும் கண்டறியுமாறு போலீசார் செய்தி அனுப்பியுள்ளதாக கூறினார்.
இந்த மொபைல் எண் என்னுடையது இல்லை இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அகல்யா கூறியுள்ளார். அதற்கு மன்னிக்கவும் மேடம், இந்த எண்ணை நீங்கள் டெல்லி ஏர்டெல் ஸ்டோர்-ல் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வாங்கியதாக எங்கள் சிஸ்டம் காட்டுகிறது என அந்த நபர் தெரிவித்துள்ளார். மீண்டும் மறுத்த அகல்யா, நான் டெல்லிக்கு வரவும் இல்லை வாங்கவும் இல்லை நான் சென்னையில் இருக்கிறேன் என கூறியதற்கு, மேடம் இந்த எண்ணை ஏற்கனவே தடை செய்துள்ளோம் என கூறியுள்ளார். உடனே அகல்யா தான் சைபர் க்ரைம்- க்கு செல்ல போவதாக தெரிவித்ததும் , ஆம் நீங்கள் போக வேண்டும் அதற்கு முன் எங்களுடைய சில கேள்விக்கு பதில் அளிக்குமாறு கூறினார். அகல்யா எச்சரிக்கையுடன் அந்த தொடர்பை துண்டித்துள்ளார்.
மீண்டும் அடுத்த நாள்( நேற்று) வேறு ஒரு எண்ணில் இருந்து பெண் குரலில் அழைப்பு வந்தது. அதில் “உங்கள் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் தொடர்ந்து பகிரப்படுகின்றன, நீங்கள் 2 மணி நேரத்திற்குள் இது தொடர்பாக பதில் அளிக்கவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம், மேலும் தகவலுக்கு எண் 9 -ஐ அழுத்தவும்” [your personal information is being used on dark web continuously, if you don’t report in 2 hours we will take legal action against you, for further information press 9 ]. உடனே அகல்யா இது மோசடி அழைப்பு என விழித்துக்கொண்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இவ்வாறான அழைப்பு மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதினால் அகல்யா போன்ற பெண்கள், ஆண்கள் என பொது மக்கள் எச்சரிக்கை மற்றும் விழ்ப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒரு வேளை இது போன்ற அழைப்புகளை ஏற்றிருந்தால் உடனடியாக துண்டித்து உடனே அந்த எண்ணைபிளாக் செய்ய வேண்டும்.
சைபர் கிரைம் பண மோசடி புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இலவச சைபர் கிரைம் உதவி எண் 1930 – ஐ தொடர்பு கொள்ளவும். மேலும் இது போன்ற மோசடிப்புகர்களுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எங்கிருந்தாலும் உடனடியாக, www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம்.