Homeசெய்திகள்இந்தியாமகாராஷ்டிராவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து... 2 விமானிகள் உள்பட 3 பேர் பலி

மகாராஷ்டிராவில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து… 2 விமானிகள் உள்பட 3 பேர் பலி

-

- Advertisement -

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான  ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பத்வான் பகுதியில் இன்று காலை வானில் பறந்து கொண்டிருந்த தனியார் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த ஹெலிகாப்டர் தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 2 விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பிம்ப்ரி சின்ச்வாட் போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதிக பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று  தெரியவந்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவரகள் விவரம் குறித்தும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

MUST READ