போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பு
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நான் முதல்வன் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதில் அமைச்சர்கள் பொன்முடி, சி.வி.கணேசன் மற்றும் அரசு துறை செயலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் முதல்வன் திட்டம் பல மாணவர்களுக்கு பயன் உள்ளதாக செயல்பட்டு வருகிறது.
போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தங்களை தயார் செய்துகொள்ளும் வகையில் நான் முதல்வன் திட்டத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவன பணியிடங்களில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க பிரதமரை சந்தித்தபோது கோரிக்கை வைத்தேன் என்றும் அதற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என்றும் பேட்டியில் தெரிவித்தார்.