ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஜெயம் ரவி, எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ், சீதா, போன்றோரும் நடித்திருக்கின்றனர். இந்த படம் அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து மக்காமிஷி எனும் முதல் பாடலும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
- Advertisement -