Homeசெய்திகள்சினிமா'வீர தீர சூரன்' இப்படிதான் தொடங்கும்.... படத்தின் காட்சிகள் குறித்து பேசிய இயக்குனர் அருண்குமார்!

‘வீர தீர சூரன்’ இப்படிதான் தொடங்கும்…. படத்தின் காட்சிகள் குறித்து பேசிய இயக்குனர் அருண்குமார்!

-

- Advertisement -

இயக்குனர் அருண்குமார் தமிழ் சினிமாவில் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் கடைசியாக சித்தா எனும் திரைப்படம் வெளியானது. 'வீர தீர சூரன்' இப்படிதான் தொடங்கும்.... படத்தின் காட்சிகள் குறித்து பேசிய இயக்குனர் அருண்குமார்!நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக அருண்குமார், நடிகர் விக்ரம் நடிப்பில் வீர தீர சூரன் பாகம் 2 எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தினை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சித்திக், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தினை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இயக்குனர் அருண்குமார் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வீர தீர சூரன் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். 'வீர தீர சூரன்' இப்படிதான் தொடங்கும்.... படத்தின் காட்சிகள் குறித்து பேசிய இயக்குனர் அருண்குமார்!“வீர தீர சூரன் பாகம் 2 படம் நேரடியாக சண்டைக்காட்சியில் தொடங்கும். அதற்கான காரணம் என்ன என்பது முதல் பாகத்தில் இருக்கிறது. இரண்டாம் பாகத்தில் அதிக காட்சிகள் இருக்காது. மொத்தமாக பத்து முதல் 15 காட்சிகள் தான் இருக்கும். இதை எவ்வாறு எடுக்க வேண்டும் என நினைத்து எடுத்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு காட்சியும் 5 முதல் 7 நிமிடங்கள் நீளமான காட்சிகளாக இருக்கும்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் அருண்குமார்.

MUST READ