விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஷ்ணு விஷால் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடியவர். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை, ராட்சசன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கடைசியாக இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதே சமயம் விஷ்ணு விஷால், மோகன்தாஸ், ஓர் மாம்பழ சீசனில் போன்ற ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆர்யன் எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
FULL THROTTLE, from here to the end🔥#Aaryan is gearing up for the final chase. Shoot in full swing!@TheVishnuVishal @VVStudioz @adamworx @DCompanyOffl @DuraiKv @selvaraghavan @ShraddhaSrinath @SamCSmusic #rahil_dop @Sanlokesh @silvastunt #ArtDirJai @prathool @sarathnivash… pic.twitter.com/IhdDxwvscG
— Vishnu Vishal Studioz (@VVStudioz) October 4, 2024
அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஆர்யன் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக படக்குழு வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்யன் திரைப்படத்தை விஷ்ணு விஷால் தயாரிக்க பிரவீன் இயக்கி வருகிறார். சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஷ்ணு விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.